டூவிலர் மீது லாரி மோதியதில் விவசாயி பலி..

41
Spread the love

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் பிராந்தகம் பெரிய பாளையம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ்(40). விவசாயி ஆன இவருக்கு திருணமாகி பார்வதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், நாகராஜ் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் குமாரபாளையம் மேட்டுக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தார். மேட்டுக்கடை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த லாரி அதிவேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜை, அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த நல்லூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவ செய்து, லாரி ஓட்டுநரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY