உலகக் கோப்பை; வெற்றியுடன் தொடங்கிய இந்தியா….

100
 
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், தனது முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி, 42.5 ஓவர்களில் 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 59 ரன்கள் குவித்தும், கேப்டன் ப்ரியம் கார்க் 72 பந்துகளில் 56 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினர். அதே போல் துருவ் ஜூரல் 48 பந்துகளில் 52 ரன்களும், சித்தேஷ் வீர் 27 பந்துகளில் 44 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் நின்றனர். இதனை தொடர்ந்து நாளை தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானுடன் இந்திய அணி மோதவுள்ளது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY