மோடி குறித்து பேச்சு.. உதயநிதி இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க கெடு..

233
Spread the love
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். மேலும் அவர் தமிழகமெங்கும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என பேசியிருந்தார். இது உண்மைக்கு மாறான தகவல் என்று கூறி, சுஷ்மா ஸ்வராஜின் மகள் ட்விட்டர் மூலம் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் ஏப்ரல் 2 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் 7-ந் தேதி மாலை 5 மணியளவில் அவர் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY