திருவாரூர் வேண்டாம்.. உதயநிதியின் அரசியல் முடிவு..

272
Spread the love

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ரகசியமாக மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. குறிப்பாக தங்களுக்கான தொகுதிகள் எவை? எவை? என்பது குறித்தும் அவற்றில் யார் வேட்பாளர் யார்? யார்? என்பது குறித்தும் அவை தீவிர ஆலோசனையில் உள்ளன. இதற்கான பணிகளை திமுகவிற்கு பிரசாந்த் கிஷோரின்  ஐபேக்கும். அதிமுகவிற்கு சுனிலின் ஓஎம்ஜி நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்த தேர்தலில் திமுகவின் ஸ்டார் வேட்பாளரான ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக கருதப்படுபவர் உதயநிதி. ஸ்டாலின் கொளத்தூர் என்கிற நிலையில் உதயநிதி எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்கிற கேள்விகள்  திமுகவில் எழத்துவங்கி விட்டன. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கடைசியாக 2 தேர்தல்களில் தனது சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவிற்கு பின்னர் அவரது குடும்பத்தில் யாரும் போட்டியிடுவார்களா? என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன்  போட்டியிட்டார். இந்த நிலையில் உதயநிதி எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. அதற்கான பணிகளை ஐபேக் நிறுவனம் ரகசியமாக மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிகிறது. கருணாநிதி குடும்பத்தாரை பொருத்தவரை திருவாரூரில் நம்ம ஆட்கள் யாராவது நின்றால் நன்றாக இருக்கும் என்பதை கருதுகின்றனர். இது தொடர்பாக ஸ்டாலினிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரோ உதயாவிடம்  பேசுங்கள் என ஒதுங்கிக்கொண்டாராம். திருவாரூர் என்கிற ஒரு தகவல் உலவ ஆரம்பித்ததுமே தனது தாயிடம் திருவாரூர் வேண்டாம் என உதயநிதி கூறி விட்டதாக தெரிகிறது. தற்போது இளைஞர் அணி பொறுப்பில் இருப்பதால் சென்னையில் அரசியல் செய்வது தான் சரியாக இருக்கும் என உதயநிதி கூறி விட்டாராம். இதன் காரணமாக உதயநிதிக்காக திருவாரூர் தொகுதியை சர்வே எடுக்கும் திட்டத்தை கைவிட்ட ஐபேக்  சென்னையில் எந்த தொகுதி உதயநிதிக்கு சரியாக இருக்கும் என சர்வே மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..  

LEAVE A REPLY