உகாண்டா நாட்டின் கம்பாலா பகுதியைச் சேர்ந்தவர் ஜோ ரவ்மேரியா. அவர் விடும் பின்காற்றால் (புரியுதா?) அவருக்கு வேலை கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, ஒருநாள் நான் வீட்டில் இருந்தபோது என்னருகே கொசுக்கள், சின்னச்சின்ன பூச்சிகள் வராமல் இருப்பதை கண்டேன். அதன் பின்புதான் நான் விடும் பின்காற்று பட்ட  பூச்சிகள் எல்லாம் செத்து விழுவதை கண்டேன். அதன் பின்பு தான் எனது பின் காற்றுக்கு இப்படி ஒரு சக்தி இருப்பதை உணர்ந்தேன். நான் விடும் பின் காற்றால் சுமார் 6 மீட்டர் தொலைவு வரை உள்ள சிறிய உயிரினங்கள் எல்லாம் செத்துப் போகிறது. நான் மற்றவர்கள் போலவே சாப்பிடுகிறேன் என்றார்.

இதனால் அவர் அப்பகுதியில் பிரபலமானார். இதை கேள்விப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் பின் காற்று விடுவதற்காகவே பணிக்கு அமர்த்தியுள்ளது. இதற்காக அவருக்கு ஆண்டுக்கு பல லட்ச ரூபாய் சம்பளம் தருகிறது. அந்நிறுவனம் கொசு மற்றும் பூச்சிகளை அழிக்கும் மருந்து தயாரித்து வருகிறது. இவரது பின் காற்றில் இருந்து அப்படி என்ன வருகிறது. எதனால் கொசுக்கள் எல்லாம் இவரது பின் காற்றால் செத்து மடிகிறது என்பதை ஆராய்ச்சி செய்யவே அந்நிறுவனம் இவரை பணிக்கு அமர்த்தியுள்ளதாம். அட கருமமே என்று சொல்லத் தோன்றுமே!

LEAVE A REPLY