Spread the love
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைனுக்கு சென்ற விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 176 பேரும் பலியாயினர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்தாக ஈரான் கூறியது.
 
இந்நிலையில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம்  பறந்து கொண்டிருந்ததாகவும், மனித தவறுகளால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டது. 

LEAVE A REPLY