Spread the love

அறிவியல் தொழில் நுட்பம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் பத்திரிகை துறைக்கு பெரும் உதவியாக இருக்கிறது. சீனாவில் புதிதாக எதிர்கால செய்தி வாசிப்பு தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளது. ஓரிடத்தில் நிகழும் செய்திகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை ஊடகங்கள் செய்கின்றன. இவை செய்தித் தாள்கள், நேரலை செய்தி தொலைக்காட்சிகள், இணையதளங்கள், மொபைல் ஆப் என தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.  இந்நிலையில் ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற செய்தி வாசிப்பாளர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இதனை சீனாவின் ஷின்ஹூ செய்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

இதற்கு ஸாங் ஷுவா என்று பெயரிட்டுள்ளது. ஷின்ஹூ மற்றும் சீன தேடுதல் பொறி சோகோவு ஆகியவை இணைந்து இயந்திர செய்தியாளரை உருவாக்கியுள்ளன. இந்த ஏ.ஐ செய்தியாளர் பார்ப்பதற்கு கோட், டை, கண்ணாடி அணிந்து கொண்டு, கண்கள் சிமிட்டியவாறு சாதாரண மனிதரைப் போலவே காட்சியளிக்கிறார். இவரை இயந்திர மனிதன் என்று நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு அசல் மனிதரைபோலவே வடிவமைத்துள்ளனர். ஆக எதிர்காலத்தில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்களுக்கு வேலை இருக்காது போல!

LEAVE A REPLY