டெஸ்ட் அணியிலிருந்து பும்ரா விலகல்!

110
Spread the love

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் முதுகுத் தண்டில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார் என்று பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் சேர்க்கப்பட்டுள்ளார். முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆர்வத்தில் இருந்த பும்ராவுக்கு, காயம் தடைக்கல்லாக அமைந்து விட்டது. பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்புதான்.

LEAVE A REPLY