போனி புயல் துல்லிய கணிப்பு.. இந்தியாவுக்கு ஐ.நா பாராட்டு

224
Spread the love

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா சந்தித்த மிக கடுமையான புயலாக கருதப்படும் போனி, நேற்று காலை 8 மணிக்கு ஒடிசாவின் புரி நகருக்கு அருகே கரையை கடக்க துவங்கியது. இந்த புயல் பாதிப்பு காரணமாக ஒடிசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 
புயலின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து, அவ்வப்போது மாநில அரசுகளுக்கும், மீட்புப் படையினருக்கும் தகவல் அளித்து வந்தது இந்திய வானிலை மையம். மீட்புப் படையினருக்கு முன் கூட்டியே எச்சரித்ததால், அவர்கள் கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

போனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சிறப்பாக செயலாற்றிய இந்திய வானிலை மையத்தை ஐ. நா பாராட்டி உள்ளது. புயல் சென்ற பாதையில் வசித்த 2.80 கோடி பேர் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து ஐ.நா., பொதுச் செயலாளரின் பேரிடர் தடுப்பு பிரிவின் சிறப்பு பிரதிநிதியான மாமி மிசுவோரி கூறுகையில்,  மிக துல்லியமாக முன்கூட்டியே இந்திய வானிலை மையம் புயல் நகர்வுகளை கண்காணித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகள், விமான நிலையங்கள் மூடப்பட்டது, போக்குவரத்து நிறுத்தப்பட்டது உயிரிழப்புக்களையும், காயங்களையும் தவிர்த்துள்ளது. பொருட் சேதம் அதிகம் இருப்பினும் உயிர் இழப்பு இல்லாதது பாராட்டுக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY