Spread the love

பிரிட்டன் நாட்டு பாராளுமன்றத்தில் பொதுச்சபை, பிரபுக்கள் சபை என இரு சபைகள் உள்ளன. பொதுச்சபையில் 650 எம்.பி.க்கள், பிரபுக்கள் சபையில் 788 எம்.பி.க்கள் உள்ளனர். 2011-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி பாராளுமன்றத்துக்கு முந்தையை தேர்தல் நடத்தப்பட்ட நாளில் இருந்து ஐந்தாவது ஆண்டில் வரும் கடைசி மே மாதத்தின் முதல் வியாழக்கிழமையில் மறுமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில் பிரெக்சிட் விவகாரத்தில் பிரதமர் தெரசா மே தனது பதவியை கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்தார். அதன்பின் போரிஸ் ஜான்சன் பிரதமரானார். அவரும் பிரெக்சிட் விவகாரத்தில் சிக்கி எரிச்சலடைந்து முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தார்.

இதற்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி நேற்று  ஒப்புதல் அளித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தும் முடிவுக்கு ஆதரவான தீர்மானம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து டிசம்பர் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1923-ம் ஆண்டுக்கு பிறகு பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டுதான் டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY