மீன் கடைகளை ‘ஆபீசாக்கும்’ திருச்சி வியாபாரிகள்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள்..

480
Spread the love

திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட் தற்போது உறையூர் குழுமணி சாலையில் புதிதாக மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள நவீன டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு சில்லறை மற்றும மொத்த மீன் விற்பனை கடைகளுக்கு என தனித்தனி பகுதி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 28 சில்லறை வியாபாரிகள் கடை அமைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கடைகளில் ஒரு சில தவிர மற்ற கடைகளை மொத்த மீன் வியாபாரிகள்  தங்களது அலுவலகமாக பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

  இதன் காரணமாக இடம் கிடைக்காத சில்லறை வியாபாரிகள் மீண்டும் வெளியில் கடைகளை அமைத்து விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறும் போது மொத்த மீன் வியாபாரிகள் ‘ மாநகராட்சி அதிகாரிகளை’ தங்களது கைக்குள் வைத்துக்கொண்டு சில்லறை வியாபாரிகளுக்கான கடைகளை தங்களது அலுவலகமாக மாற்றி உள்ளனர். சில வியாபாரிகள் பைனான்ஸ் அலுவலகம் போல் கிளாஸ் டோர், டேபிள், சேர் பேன் என ஹைடெக் அலுவலகமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனை அதிகாரிகளும் கண்டுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக சில்லறை வியாபாரிகள் கொட்டகைகள் அமைத்து கடைகளை போட ஆரம்பித்து விட்டனர். இந்த விஷயத்தில் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்… 

LEAVE A REPLY