உதவி இயக்குநருடன் திடீர் திருமணம்….பிரபல நடிகை….

122
Spread the love

தமிழில் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, மணியார் குடும்பம், சிக்கிக்கு சிக்கிக்கிச்சி போன்ற படங்களில் நடித்தவர் மிருதுளா முரளி. இவர் மலையாளத்தில் ரெட் சில்லீஸ் படத்தில் அறிமுகமாகி அதிக படங்களில் நடித்து இருக்கிறார். பகத் பாசிலுடன் நடித்த ஆயாள் ஞான் அல்ல என்ற படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்தியில் ரக்தேஷ் படத்தில் நடித்துள்ளார். சொல்லவே இல்ல...நடிகை மிருதுளா முரளிக்கு நிச்சயதார்த்தம்... | Maniyar  kudumbam Actress Mrudula Murali gets engaged - Tamil Filmibeat

மிருதுளா முரளியும், நிதின் என்ற சினிமா உதவி இயக்குனரும் நீண்ட நாட்களாக காதலித்தனர். திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தனர். இவர்கள் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்டது.
 
கணவருடன் மிருதுளா முரளிஇந்த நிலையில் மிருதுளா முரளி, நிதின் திருமணம் கொச்சியில் நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், பாடகர் விஜய் ஜேசுதாஸ் ஆகியோர் நேரில் மணமக்களை வாழ்த்தினார்கள்.

LEAVE A REPLY