வாங்காத விருதை திருப்பி தருவதாக கூறிய வைரமுத்து…

236
Spread the love

கேரளாவில் புகழ்பெற்ற ஓஎன்வி விருது வைரமுத்துவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பாடகி சின்மயி, நடிகை பார்வதி நாயர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வைரமுத்துவுக்கு அளிக்கவிருந்த விருதை மறுபரிசீலனை செய்யப்போவதாக ஓஎன்வி நேற்று அறிவித்தது. சர்ச்சையை கிளப்பியுள்ள இவ்விவகாரத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் எழுந்தது.

latest tamil news

கேரள விருதை திருப்பி அளிக்கிறேன் - கொந்தளித்த வைரமுத்து

இந்நிலையில் ஓஎன்வி விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு கொடுக்கப்படவிருந்த விருதை மறு பரிசீலனை செய்யவிருப்பதாக அறிந்தேன். இது என்னையும், கவிஞர் ஓஎன்பியை சிறுமைப்படுத்துவதாக என நினைக்கிறேன்.சர்ச்சைக்கிடையே இந்த விருது பெறுவதை தவிர்க்கவே விரும்புகிறேன். நான் மிகமிக உண்மையாக இருக்கிறேன். ஆகவே எனக்கு அளிக்கப்பட்ட விருதை ஓஎன்பிக்கே திருப்பி அளிக்கிறேன். அதோடு எனக்கு கொடுக்கப்பட இருந்த பரிசு தொகையை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY