தேர்தல் ஜூரம்… சசிகலா பக்கம் சாயும் “வைத்தி”…

1149
Spread the love

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் எம்பி வைத்தியலிங்கம். கடந்த தேர்தலில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் தோல்வியை தழுவியர். ஆரம்பத்திலேயே சசிகலா தரப்பினருக்கு எதிராக தன்னைக் காட்டிக்கொண்டவர். கடந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் தோல்விக்கு காரணம் சசிகலா தரப்பினர் தான் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் கூறி வருத்தப்பட்டதன் எதிரொலியாக உடனடியாக எம்பி பதவியை பெற்றார் என்று கூறப்பட்டது.  அதிமுகவில் இருந்து சசிகலாவும். டிடிவி தினகரனும் நீக்கப்பட்டதாக இரவு நேரத்தில் அறிவித்தவர்களில் முக்கியமானவர். ஒபிஎஸ்சுக்கு நெருக்கமாகவே இருந்து வந்த  வைத்தியலிங்கம் தனக்கு எப்படியும் மத்திய அமைச்சர் பதவி கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் இருந்து வந்தார். மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு தற்போது வாய்ப்பு இல்லை என்பதாலும் தற்போதைய நிலையில் மத்திய அமைச்சர் பதவி ஓபிஎஸ்சின் மகன்  ரவீந்திரநாத் மற்றும் வாசன் ஆகியோருக்கு தான் வாய்ப்பு என கூறப்படுவதால் ஏமாற்றத்தில் உள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.. அதோடு வைத்தியலிங்கத்தின் எம்பி பதவிக்காலம் ஒரு ஆண்டு மட்டுமே உள்ளதால் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காது என்கிற முடிவிற்கு வந்து விட்ட வைத்தியலிங்கம் மீண்டும் எம்எல்ஏவாக முடிவெடுத்தாக கூறப்படுகிறது..

அவரது சொந்ததொகுதியான ஒரத்தநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றால் அமமுக போட்டியிடாமல் இருக்க வேண்டும். அதிலும் ஒரத்தநாடு சேகர் கண்டிப்பாக நிற்க கூடாது. அந்த பகுதியில் செல்வாக்கு பெற்ற சேகர் அமமுக சார்பில் போட்டியிட்டால் தனக்கு கஷ்டம் என்கிற நிலையில் உள்ள வைத்தியலிங்கம் கடந்த ஒரு மாதகாலமாக சசிகலா மற்றும் டிடிவிக்கு ஆதரவுமனநிலைக்கு வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக கொடியினை சசிகலா பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்திற்கு செல்லும் போது வைத்தியலிங்கத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. நான் வரவில்லை என கூறிய அவர் ஒதுங்கிக்கொண்டார்.. இன்றைய தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சிக்கு வந்தார். திருச்சி மாநகர் அதிமுகவின் பொறுப்பாளரான வைத்தியலிங்கம் இன்று வரவில்லை..  இப்படியாக ஒதுங்கும் வைத்தியலிங்கம் .. அடுத்த சில நாட்களில் சசிகலாவை சந்தித்தால் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர் தஞ்சை அதிமுகவினர்.சசிகலாவின் கணவர் நடராசனின் அக்கா வனரோஜாவின் மகன் தனசேகரன். இவர்  அ.ம.மு.க-வில் தஞ்சை மாநகர எம்.ஜி.ஆர் மன்றப் பேரவைச் செயலாளராக இருக்கிறார். அவரை சமீபத்தில் சந்தித்தார் வைத்தியலிங்கம். அவரை பொருத்தவரை அதிமுக-அமமுக இணைந்தால் ஒரத்தநாட்டில் பிரச்சனை இல்லை என நினைத்திருந்தார். தற்போதைய சூழ்நிலையில் அது நடக்காது என்பது முடிவாகி விட்டதால் சசிகலாவை சந்தித்து விட்டு ஒரத்தநாடு தொகுதியில் அமமுக ஆதரவு சுயேட்சையாக  போட்டியிட முடிவெடுத்திருக்கிறார் என்கின்றனர் அவர்கள்… 

LEAVE A REPLY