வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்… பரஞ்ஜோதி வேண்டுகோள்…

37
Spread the love

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை.. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை 12.12.2020 (சனிக் கிழமை), மற்றும் நாளை மறுநாள் 13.12.2020 (ஞாயிற்றுக கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதுசமயம், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக எம்.ஜி.ஆர் மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட கிளை அளவில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள  உடன்பிறப்புகள்  கலந்து கொண்டு வாக்காளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களின் துணையுடன் தேவையான படிவங்களைப்பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாமில் வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY