வானம்.. வசப்படும்..

148
Spread the love

ஒரு மனிதன் தனக்கு என்ன நடக்கும் – எது கிடைக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறானோ அதுவே அவனுக்கு நடக்கும். அதுவே அவனுக்குக் கிடைக்கும். நன்மைகளை நாம் அடைந்தே தீருவோம். வெற்றிகளை நாம் குவித்தே தீருவோம் என்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் உறுதியாக இருக்க வேண்டும். வேரூன்றி விளங்க வேண்டும் என்கின்றனர் ஞானிகள். ‘நமக்கு எங்கே நன்மைகள் வரப்போகின்றன. நமக்கு மேலும் மேலும் சிரமங்கள்தாம் வந்து கொண்டிருக்கும்,’ என்று மனத் தளர்ச்சியோடு நாம் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தால் நாம் எதிர்பார்க்கிற துன்பங்களும், துயரங்களுமே நம்மைச் சூழும், அதுவே நம்மைத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்கும் என்கின்றனர் அவர்கள். நம்மிடத்திலே நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நம் வாழ்க்கையில் நாம் நன்மைகளையோ உயர்வுகளையோ ஒருநாளும் பெறமுடியாது. இதே கருத்தைத்தான், மனம்போல வாழ்வு என்ற பழமொழி பேசுகிறது. வாழ்க்கையில் தன்னம்பிக்கையை இழந்தவர்களின் மனம் தூய வழிகளில் செல்லாது. தீய வழிகளில்தான் அவர்களுடைய புத்தி போய்க் கொண்டிருக்கும். அவர்கள் தீய செயல்களிலேயே ஈடுபடத் தொடங்குவார்கள். தீய செயல்கள் மனிதனை மேலும் மேலும் கோழையாக்கி, அவனை உருத்தெரியாமல் அழித்துவிடுகின்றன. எனவே  தன்னம்பிக்கை இருந்தால் வானம் வசப்படும்..

LEAVE A REPLY