வானம்… வசப்படும்….

246
Spread the love

நமக்கு எப்போதும் கை கொடுக்கும் நம்பிக்கை. எதை வேண்டுமானாலும் அடைய ஆசைப்படுங்கள். ஆனால், அந்த ஆசை நியாயமானதாக இருக்க வேண்டும். அதைச் சாதிக்க திறமை வேண்டும். திட்டமிடல் வேண்டும், விடாமுயற்சி வேண்டும், கடின உழைப்பு வேண்டும். இவைகளிருந்தால் எதையும் சாதிக்கலாம். செயல் என்பது உயிரின் இசை என்றொரு பழமொழி உண்டு. அதைச் செயல்படுத்துங்கள். இன்ப வாழ்க்கை வாழ மனிதனுக்குச் சிந்தனை எவ்வளவு அவசியமாகத் தேவையோ அந்த அளவுக்கு செயலாற்றலும் தேவை சொன்னவர் ஹாஸ்விட் அறிஞர். அறிவு தான் ஆற்றல் சொன்னவர் பேகன். நம்பிக்கையானது துணிச்சலைத் தட்டி எழுப்புகிறது. நம்பிக்கை மனித இதயத்தில் துணிச்சலை ஊட்டக்கூடியது சொன்னவர் லான்மெல் அறிஞர். தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாததாகும். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும் என்று சொன்னவர் விவேகானந்தர்.

வயதைக் கூட்டுவதல்ல நம் வாழ்க்கையின் நோக்கம். வயதிற்கு உயிர் ஊட்டுவதுதான் நம் வாழ்க்கையின் நோக்கம் சொன்னவர் அலெக்ஸிக்ச் கார்மல். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற கொள்கையில் வாழ் நாளெல்லாம் ஒவ்வொரு நொடியையும் செலவிடுங்கள். இந்த இலட்சியத்தை தம்மால் அடைய முடியும் என்று மனதார நம்புவதே தன்னம்பிக்கை. எதை இழந்தாலும் இழக்காலாம். ஆனால் இழக்கக்கூடாத ஒன்று தன்னம்பிக்கைதான். தேவைற்ற பொருள்களை வாங்காமல் இருப்பதே ஒருவகை வருமானம் தான். உங்களுக்கு அருகாமையில் உள்ள வீட்டு நண்பர்களோ அல்லது அலுவலக நண்பர்களோ அல்லது நீங்கள் இருக்கும் எந்த இடத்திலும் சுற்றியருப்பவர்களின் நட்பை ஒரு போதும் இழந்துவிடாதீர்கள். உங்கள் வார்த்தைகள் எப்போதும் மென்மையாகவும், இனிமை கலந்ததாகவும் இருக்கட்டும்.
மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற அவர்களுக்கு நீங்கள் முதலில் உதவ வேண்டும். பின்னர் நம் வாழ்வில் வானம் வசப்படும்.

LEAVE A REPLY