வானம்.. வசப்படும்

126

பணம் வாழ்க்கைக்கு அவசியம் தேவை தான். அந்த அவசியம் ஒரு கட்டத்தில் பணத்தின் மீது ஆசையை ஏற்படுத்தி மோகத்தை கொடுத்து இறுதியில் பேராபத்தாய் முடிகிறது..சிலருக்கு அந்த பணம் வருவதற்கு முன்னால் பட்ட வேதனை பாதிப்பு அவமானம் ஆகியவை ஆசைக்கு காரணமாக இருக்கிறது. இந்த பணத்தாசை நாளடைவில் சம்பாதிக்க வேண்டும் மற்றவர்கள் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என வெறியாக மாறி விடுகிறது.. நாளடைவில் பலருக்கு பணம் சேர சேர அதனால் ஏற்படும் போதையில் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத ஒரு நிலை கூட உருவாகி வருகிறது. ஒரு கட்டத்தில் பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் மனிதனுக்கு வந்து விடுகிறது..

சிலர் தன்னை ஆளாக்கி விட்டவர்களை கூட மறக்கும் அளவிற்கு இந்த பணம் மனதை மாற்றி விடுவதும் நடக்கிறது.. தானும் பெரிய ஆள் என்ற நினைப்பு வந்ததும் ஆரம்ப காலத்தில் யாரெல்லாம் அவர்களை மதிக்கவில்லையோ அவர்களை எல்லாம் மிதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்படுகிறது.. எனவே பணத்தை நாம் கையாள வேண்டுமே தவிர.. பணம் நம்மை கையாள வேண்டும் .. இது நடந்தால் நமக்கு வானம் வசப்படும்.. 

 

LEAVE A REPLY