வானம்… வசப்படும்

107

வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால் வெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது தன்னம்பிக்கை ஆகும். தன்னம்பிக்கை உடையவன் எதிலும் எளிதாக வெற்றி அடையமுடியும்.இமாலய சாதனைகளை கூட அவர்களால் வெல்லமுடியும். எந்த பிடிப்பும் இல்லாமல் ஒரு மனிதன்வானளாவிய கட்டிட சுவற்றில் தன் கைகளை மட்டும் பயன்படுத்தி ஏறி சாதனை செய்து விடுகிறான்.அதே போல் உயர்ந்த மலைகளிலும் ஏறி சாதனை செய்ய முடிகிறது. இது எப்படி சாத்தியம் ஆகிறது என்றால் இதற்கு அவனது தன்னம்பிக்கையே தான் காரணம்.மாணவர்களில் கூட தன்னம்பிக்கை உடையவர்கள் தடம் புரளாமல் வெற்றி நோக்கி செல்கின்றனர். தன்னம்பிக்கை இல்லாமல் தன்னையே நம்பாதவன் தடம் புரள்கிறான். நூற்றுக்கு நூறு மார்க்கு எடுத்து விடுவேன் என்று முயன்று முயற்சி செய்கிறவனின் நம்பிக்கை எண்ணம் உடையவனால் அதை சாகிக்க முடிகிறது. சிலர் படிக்கும்போதும் ,பரீட்சை எழுதும் போதும் கூட தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். ஒரு சில மாணவர்கள் நம்பிக்கையுடன் படிக்கும்பொது அந்த மாணவர்களிடத்தில் கூட ‘டேய் எவ்வளவு எழுதினாலும் பத்து மார்க்கு கேள்வி பதிலுக்கு எட்டு மார்க்குக்கு மேல் போடா மாட்டார்கள் என்று ஆரம்பத்திலே அவனுக்கு நம்பிக்கை குறைவை ஏற்படுத்துவார்கள். ஆனால் இப்போது எல்லாம் நூற்றுக்கு நூறுஎன்பது எல்லா பாடங்களிலும் எடுக்க முடிகிறது .அது எவ்வாறு சாத்தியம் எனில் மாணவர்கள் தங்களது மீது கொண்டுள்ள நம்பிக்கை தான்… நம்புங்கள் வானம் வசப்படும்.. 

LEAVE A REPLY