மம்தாவை எச்சரித்த கவர்னர்… பதவி ஏற்பு விழாவில் பரபரப்பு..

629
Spread the love
மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு, மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று  தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாக இன்று காலை பதவியேற்றுக்கொண்டார். கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக பதவியேற்றார். மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதில் சிறப்பு விருந்தினராக சவுரவ் கங்குலி பங்கேற்றார். இந்நிலையில் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.. அவர்களின் வீடுகளும் தாக்கப்பட்டு வருகின்றன.. இந்த நிலையில் பதவியேற்பு விழா மேடையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் நேரடியாக ஆளுநர் ஜெகதீப் தங்கர் சில நிமிடங்கள் பேசினார். இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் தொடரும் வன்முறையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மம்தாவை கவர்னர் ஜெகதீப் தங்கர் எச்சரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.. 

LEAVE A REPLY