காந்தி மார்க்கெட் திறக்கக் கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…

89
Spread the love

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பணி புரியும் சுமைப்பணி தொழிலாளர்களின் சிஐடியு, எல்எல்எப், எல்பிஎப், உருளைக்கிழங்கு கமிஷன் மண்டி உள்ளிட்ட சங்கங்கள் அடங்கிய, காந்தி மார்க்கெட் சுமைப்பணி தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காந்தி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும், செப்டம்பர் 7ம் தேதி மாவட்ட கலெக்டர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. சுமைப்பணி தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY