திருச்சி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மீது வழக்கு..

223
Spread the love

வரதட்சணை கேட்ட கணவன் மீது புகார்: திருச்சி கே.கே.நகர் உடையாம்பட்டி சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரின் மனைவி ரம்யா(31) கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில், கணேஷ்குமார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறி உள்ளார். புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

ஆபாச படங்கள் டவுன்லோட் செய்தவர்கள் மீது வழக்கு: திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகரை சேர்ந்த வைதீஸ்வரன்(32) மற்றும் முருகன் ஆகியோர் ஆபாசப் படங்களை டவுன்லோட் செய்து அப்லோட் செய்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தின் மீது திருச்சியில் முதல் வழக்கு: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து திருச்சி ரஜினி மக்கள் மன்றத்தினர் மாவட்ட செயலாளர் கலீல் தலைமையில் திருச்சி வழிவிடு முருகன் கோவில் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஊரடங்கு விதிமுறைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 10 பெண்கள் உள்பட 40 பேர் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கட்சி தொடக்கம் என்று ரஜினி அறிவித்து நிலையில் அவரின் கட்சி காரர்கள் மீது திருச்சியில் பதியப்பட்ட முதல் வழக்குத் ஆகும்.

LEAVE A REPLY