மாமனார் பாலியல் தொல்லை.. திருச்சி பெண் போலீசில் புகார்..

655
Spread the love

திருச்சி கருமண்டபம் புது தெருவைச் சேர்ந்தவர் சகாயவிஜி(39). இவர் ஆனந்தராஜ்(37) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்தின் போது 15 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின் ஆனந்தராஜ் ஆண்மையற்றவர் என்று சகாய விஜிக்கு தெரியவந்தது. ஆனந்தராஜின் தந்தையும் சகாய விஜியின் மாமனாரும் ஆன அன்புரோஸ்(63) விடம் இது குறித்து கூறிய போது…. அவர் ஆறுதல் கூறுவது போல நடித்து, பாலியலுக்கு முயன்றுள்ளார்.  மனம் வெறுத்த சகாயவிஜி இதுகுறித்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் அனந்தராஜ், அன்புரோஸ், மாமியார் சகாய அல்போன்சா மேரி, மகள் ப்ரியா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY