வேலை இல்லையாம்.. ஐடி கட்ட முடியலையாம்.. நடிகை சொல்றத கேளுங்க.. …

140
Spread the love

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகக் கருதப்பட்டு வரும் நடிகை கங்கனா ரனாவத் தனக்கு வேலை இல்லாததால் கடந்த ஆண்டின் வரியில் பாதியை செலுத்த முடியவில்லை தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது…. “நான் அதிக வரி செலுத்தும் நபர்களில் ஒருவராக இருந்த போதிலும், எனது வருமானத்தில் கிட்டத்தட்ட 45% வரியாக செலுத்தி வந்த போதிலும், அதிக வரி செலுத்தும் நடிகை என்ற போதிலும், எனக்கு வேலைகள் அமையாததால் கடந்த ஆண்டின் வரியின் பாதியை இதுவரை செலுத்தவில்லை. என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் வரி செலுத்துவதில் தாமதமாகிவிட்டேன்.” என்று இவ்வாறு கூறியுள்ளார்.பிரபல இளம் நடிகைக்கு மிரட்டல்! மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த அதிரடி  முடிவு! - Seithipunal

“நமக்கு சில நேரங்களில் மிகவும் கஷ்டம் ஏற்படும். ஆனால் நாம் ஒன்றாக செயல்பட்டால் அந்த நேரத்தை நம் வலிமையால் வென்றுவிடுகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார். கங்கனா ரணாவத் கடைசியாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்ட ‘தலைவி’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை ஏஎல் விஜய் இயக்கியுள்ளார். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY