அண்ணன் வந்துட்டாருல…. அமைச்சர் வெல்லமண்டி தரப்பு உற்சாகம்…

292
Spread the love

 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதிலும் உள்ள தொகுதிகளை உள்ளடக்கிய மண்டல பொறுப்பாளர்களை அதிமுக தலைமை நியமித்துள்ளது. அந்த வகையில்  அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கத்திற்கு தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாநகர் மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வைத்தியலிங்கம் திருச்சி மாநகருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஏற்கனவே மாநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நியமிக்கப்பட்டதில் வைத்தியலிங்கம் பெரும்பங்கு வகித்தாக கூறப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதி அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு மீண்டும் கிடைக்குமா?  தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கும் ஆவின் சேர்மன் கார்த்திகேயனுக்கு கிடைக்குமா? என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியலிங்கத்தின் நியமனம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தரப்பிற்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது…  

LEAVE A REPLY