உங்களில் ஒருவன்… – வெல்லமண்டி நடராஜன் அறிக்கை

288
Spread the love

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெல்லமண்டி.ந. நடராஜன் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில்…….. முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா காட்டிய வழியில் முன்னாள் தமிழக முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் தமிழக துணை முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க திருச்சி மண்டல பொறுப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், எம்.பி., வழிகாட்டுதளின்படி நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராகிய எனக்கு வாக்களித்த வாக்காள பெருமக்கள், கழகத்தினர். கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். அனைத்து சமுதாய மக்கள், வாக்களிக்காத வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றியோ. தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். உங்களுடனேயே பயணிப்பேன். எப்போதும் போலவே என் மக்கள் பணி தொடரும். நான் எப்போதும் உங்களில் ஒருவன் தான். உங்களுக்கான ஒருவன் தான் என்று அவர் அந்த அறிக்கையில் தொிவித்து உள்ளார். 

LEAVE A REPLY