கிழக்கால் நான்…. கிழக்கிற்காகவே நான்….. – ஜெ. பாணியில் வெல்லமண்டி நடராஜன்

92
Spread the love

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரும், தமிழக அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் இன்று தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது…. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மிக அமைதியான ஆட்சி அமைந்ததை நீங்கள் உணர்திருப்பீர்கள். எந்தவித கட்டப்பஞ்சாயத்தோ, நில அபகரிப்போ, காவல் நிலையங்களில் மிரட்டல்களோ இல்லாமல் பொதுமக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் இந்நிலை தலைகீழாக மாறும் என்பதை பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக தொிவித்துக்கொள்கிறேன். ஜெயலலிதாவின் வழி வந்தவன் நான்…. எனவே கிழக்கு தொகுதியால் நான்…..கிழக்கு தொகுதிக்காகவே நான்….திருச்சி மாவட்டத்தில் எந்த நலத்திட்டங்கள் வந்தாலும் முதலில் கிழக்கு

தொகுதியைதான் வந்து சேரும் என்பதை உறுதியாக தொிவித்துக்கொள்கிறேன் என்று அவர் பேசினார். இந்த பிரச்சாரத்தில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசன், மாநகர மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்லின், பொருளாளர் மனோகர்,  வெல்லமண்டி ஜவகர், முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY