அதிமுக சார்பில் நிவாரண தொகுப்பு.. வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

102
Spread the love

திருச்சியில் அதிமுக சார்பில் மேற்கு சட்டமன்ற தொகுதி உள்ளடக்கிய பகுதிகளான ஜங்ஷன், தில்லைநகர், எடமலைப்பட்டி புதூர், ஆகிய பகுதிகளில் 1000த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பினை அமைச்சரும் மாநகர் மாவட்ட  செயலாளருமான வெல்லமண்டி

நடராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வளர்மதி,  மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.சி. பரமசிவம், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்  ராஜ்குமார், மாவட்ட கழக துணை செயலாளர்கள் ஜாக்குலின், அருள்ஜோதி,
மாவட்ட கழக பொருளாளர் மலைக்கோட்டை  ஐயப்பன், மாணவரணி செயலாரும் ஆவின் சேர்மனுமான கார்த்திகேயன், இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன், மகளிர் அணி செயலாளர் தமிழரசி, பகுதி கழக செயலாளர்கள் நாகநாதர்  பாண்டி, எம். ஏ. அன்பழகன், தில்லை நகர் பகுதி செயலாளர் எம்ஆர்ஐ..முஸ்தபா, ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY