வெள்ளரிக்காய்ப் பாயசம்….

48
Spread the love

தேவையான பொருட்கள்.:
வெள்ளரிக்காய் – ஒன்று (பெரியது),
பால் – 250 மில்லி,
சர்க்கரை – தேவையான அளவு,
அரிசி மாவு – 3 டீஸ்பூன்,
பாதாம் மிக்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
ஏலக்காய் (தூளாக்கிக் கொள்ளவும்) – 2,
முந்திரி – தேவையான அளவு.

செய்முறை.:
வெள்ளரிக்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். அரிசி மாவு, பாதாம் மிக்ஸை சிறிது தண்ணீரில் ஒன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ளவும். முந்திரியை ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, வெள்ளரிக்காயை மீதமிருக்கும் நெய்யில் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் வேக விடவும். இத்துடன் அரிசி மாவுக்கலவையைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி ஆறிய பால், முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

LEAVE A REPLY