அரசு அலுவலகத்தில் விஜிலன்ஸ் ரெய்டு… 34 லட்சம் பறிமுதல்

155
Spread the love

வேலுார் மாவட்டம் காந்தி நகரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளது. வேலுாா், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பட்டூர் ஆகிய மாவட்டங்கள் இந்த அலுவலக கட்டுப்பாட்டிற்குள் வரும். இந்த அலுவலகத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை பொறியாளராக இருக்கும் பன்னீர் செல்வம், தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு அதிகளவு லஞ்சம் பெறுவதாக வேலுாா் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட அவர்கள், இரவு நேரங்களில் பன்னீர் செல்வம் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடு ஒன்றில் கோப்புகளை கையாள்வதை கண்டறிந்தனர்.

இந்நிலையில் பொறி வைத்து காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அலுவலகம் போல செயல்படும் வாடகை வீட்டிற்கு காரில் சென்ற பன்னீர் செல்வத்தை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். வீட்டிற்குள் அவர் நுழைந்த உடன் அதிரடியாக அங்கு சென்ற வேலுாா் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் அவரின் கார் மற்றும் வீட்டில் இருந்து கணக்கில் வராத 34 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் அவரின் சொத்து குறித்த விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துறைரீதியான விசாரணைக்கும் பரிந்துரைத்துள்ளனர்.

LEAVE A REPLY