வேலூர் தேர்தல்.. அதிமுக சார்பில் அமைச்சர்கள் உள்பட 209 பேர் அனுப்பி வைப்பு

212
Spread the love

வேலூர் லோக்சபா தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார். அவருக்காக தேர்தல் பணி செய்ய அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆம்பூர்-திரு.கே.பி.முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும்,  குடியாத்தம் – வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் தங்கமணி ஆகியோரும், வேலூர்-அமைச்சர் செங்கோட்டையன், கே.வி.குப்பம்-அமைச்சர் வேலுமணி, அணைக்கட்டு-அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அமைச்சர்கள் உள்ளிட்ட 209 நிர்வாகிகளின் பெயர்களை அறிவித்து இபிஎஸ்-ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பொறுப்பாளர்கள் அனைவரும் 21ஆம் தேதி முதல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

LEAVE A REPLY