வேலூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது வெயிலும், ஜெயிலும்தான். அதற்கடுத்து வேலூர் கோட்டை. சுதந்திர போராட்ட காலத்திலேயே புகழ் பெற்றது வேலூர் சிறை. முதல் விடுதலைப் போரான சிப்பாய் கலகத்தில் முக்கிய பங்காற்றியது வேலூர் சிறை. வேலூர் கோட்டையும் புகழ் பெற்றது. இவற்றையெல்லாம் விட ஒவ்வொரு ஆண்டும் பேசப்படுவது வேலூரில் கொளுத்தும் வெயில்தான். ஒவ்வொரு ஆண்டும் வெயில் 100 டிகிரியை தாண்டுவதால் வேலூர் வெயிலும் பிரசித்தி பெற்று விட்டது.

அந்த வரிசையில் தற்போது மழையும் இடம் பெற்றுள்ளது. நேற்று வேலூரில் கனமழை கொட்டித் தீர்த்தது. இது 166 மி.மீட்டராக பதிவானது. இதற்கு முன் 1909-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி அதாவது 100 ஆண்டுகளுக்கு முன் 106 மி.மீ மழை பெய்ததே மிக அதிக அளவாகும். நேற்று இதை கடந்து 166 மி.மீ பதிவானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

LEAVE A REPLY