Spread the love

திமுக கூட்டணியில் காங்கிரஸ்  கட்சிக்கு 10 தொகுதிகள், கொங்கு மக்கள் தேசியகட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முடிவானது. விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. முதற்கட்ட  பேச்சுவார்த்தை மட்டுமே நடந்த நிலையில் இன்று 2 வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் திருமாவளவன்  மற்றும் விசிக நிர்வாகிகளும், திமுக சார்பில் பொன்முடி, டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, கே.என்.நேரு கலந்து கொண்டனர். இதில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஒப்பந்தத்தை  ஸ்டாலின், திருமாவளவன் பரிமாறிக் கொண்டனர். எந்தெந்த தொகுதிகள், எந்த சின்னத்தில் திமுக போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் பேசி முடிவு எடுக்கப்படும்  என்று திருமாவளவன் தெரிவித்தார்.

LEAVE A REPLY