பைப்ப திறந்தா தண்ணிக்கு பதில் கொட்டிய ரூபாய் நோட்டுகள் – வீடியோ

461
Spread the love

கர்நாடகத்தில் ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் இன்று ஒரே நாளில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்டுகளை நடத்தினர். குறிப்பாக 15 அதிகாரிகளைக் குறி வைத்து அவர்களது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் ரெய்டு நடத்தப்பட்டது.
8 எஸ்பிக்கள், 400க்கும் மேற்பட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய படை மாநிலம் முழுவதும் நடத்திய ரெய்டு, கர்நாடகாவையே அதிர வைத்து விட்டது. ரெய்டின்போது சாந்தா கெளடா பிராதார் என்ற பொதுப்பணித்துறை இளநிலை என்ஜீனியரின் வீட்டிலிருந்து 25 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதுதான் ஹாட் டாபிக் ஆகி உள்ளது. ரெய்டுக்கு சென்ற அதிகாரிகள் பல இடங்களில் தேடியும் பெரிய அளவில் பணம் கிடைக்க வில்லை. அவர் வீட்டில் பால் சீலிங் இருந்துள்ளது. சந்தேகத்தில் அதை உடைத்த போது அதிலிருந்து 15 லட்சம் ரூபாய் பணம் கொட்டி உள்ளது. இதிலும் திருப்தி அடையாத விஜிலென்ஸ் அதிகாரிகள் வீட்டை தரவாக சோதனை நடத்தினர். அப்போது கழிவு நீர் வௌியேற்றும் குழாய்கள் அந்த வீட்டில் ஜோடியாக பதிக்கப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. பிளம்பர் ஒருவரை வரவழைத்து லாவகமாக அறுத்து அந்த பைப்பை திறந்த போது அதில் இருந்து ஆயிரக்கணக்கான காந்தி தாத்தா சிரித்துக்கொண்டே வௌியே வந்துள்ளார். கழிவு நீர் பைப்பில் இரந்து 13.50 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் விஜிலென்ஸ் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த அதிகாரிக்கு 35 ஏக்கர் நிலம் உள்ளதும் தொிய வந்து உள்ளது. பைப்ப திறந்தா தண்ணீ வரும்ணு கேள்விபட்டிருக்கிறோம்…. பணம் வந்த செய்திய இப்பதான் கேள்விபடுறோம்…

LEAVE A REPLY