விஜய் ரசிகர்கள் மீது திருச்சியில் வழக்கு….

392
Spread the love

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலி: திருச்சி புத்தூர் சாலை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் என்பவரின் மகன் விக்னேஷ்(25). இவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது ஓயாமரி சுடுகாடு பாலம் அருகே சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானார். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உட்கார்ந்த நிலையில் உயிரிழந்தவர்: திருச்சி புள்ளம்பாடி பொன்னையா தெருவை சேர்ந்தவர் மனோகரன்(51) என்பவர், இனாம்குளத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக பேருந்தில், மத்திய பேருந்து நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து மற்றொரு பேருந்தில் ஏறுவதற்காக பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் அமரும் பென்சில் உட்கார்ந்த நிலையிலேயே அவர் உயிர் பிரிந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடியிலிருந்து விழுந்தவர் பலி: திருச்சி புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன்(27) கொத்தனாரான இவர் திருச்சி சாரதி நகர் பகுதியில் புதிய கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலிருந்து கீழே விழுந்தவர் உயிர் இழந்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் மீது வழக்கு: திருச்சி உறையூர் பாக்கு பேட்டை மிண்ணப்பன் தெருவில் விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடியதாக விஜய் ரசிகர்கள் 30 பேர் மீது உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY