உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி..

205
Spread the love

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகள் என இருகட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 9 மாவட்டங்களுக்கு நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை புஸ்ஸி ஆனந்த் நேற்று சந்தித்து பேசியுள்ளார். இதில், தேர்தல் நடக்கும் 9 மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, 9 மாவட்டங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டுக் கொள்ளலாம் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY