கொரோனா என்று கூறிய விஜயபாஸ்கரின் மனைவியிடம் 1 மணி நேர விசாரணை…

196
Spread the love

புதுக்கோட்டை மாஜி விஜயபாஸ்கர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர்.. எங்கெங்கு ரெய்டு நடந்தது என்கிற முழுவிபரம்..  

விராலிமலை தொகுதியில் உள்ள இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பையா, குபேந்திரன், பாண்டியன் வீடுகள், விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமாக இலுப்பூர் அடுத்த மேட்டுச்சேரியில் உள்ள மதர்தெரசா கல்லூரி, இலுப்பூர் நாயுடு தெருவில் உள்ள உதயகுமாரின் உதவியாளர் பாண்டி என்பவரின் வீடு, இலுப்பூரில் அமைச்சருக்கு சொந்தமான ராசி விடுதி, திருவேங்கைவாசலில் உள்ள ராசி மெட்டல்ஸ் கல் குவாரி யிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

இதேபோல் கைக்குறிச்சியில் கல்வி நிறுவனம் நடத்தி வரும் ஆலங்குடி துரை தனசேகரன் வீடு, புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளரான அன்பானந்தம் வீடு, புதுக்கோட்டை சார்லஸ் நகரில் முருகேசன் வீடுகளில் சோதனை நடந்தது. மேலும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மதர் தெரசா கல்வி அறக்கட்டளைக்கு கீழ் இயங்கி வரும் 14 கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடந்தது. திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எஸ்ஐஎஸ் அபார்ட்மெண்ட் 8வது மாடியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரின் வீடு, திருச்சி கிராப்பட்டி காந்தி நகரில் உள்ள இலுப்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், விஜயபாஸ்கரின் உதவியாளரும், பினாமியுமான ராஜமன்னார் (எ) குருபாபு வீட்டிலும் சோதனை நடந்தது.  சென்னை கீழ்ப்பாக்கம் ரெம்ஸ் சாலையில் உள்ள விஜயசாந்தி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு, அவரது தந்தை சின்னதம்பிக்கு சொந்தமான நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடம், உதவியாளர் சரவணனுக்கு செந்தமான நந்தனம் விரிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, நண்பர் சீனிவாசனுக்கு செந்தமான வளசரவாக்கம் நியூ பெத்தானியா நகர் 5வது தெருவில் உள்ள வீடு, மந்தைவெளிபாக்கம் விரிவாக்கம் ராஜா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் நடத்தி வரும் ஓம் ஸ்ரீ வாரி ஸ்டோன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பெசன்ட் நகர் 4வது மெயின் ரோடில் உள்ள அன்யா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயபாஸ்கருக்கு செந்தமான தி.நகர் பகீரதி அம்மன் தெருவில் உள்ள சொகுசு வீடு என 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா இருந்தார். அப்போது அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள் படி 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்போ, விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிற்கு கொரோனா குணமாகிவிட்டது. அவருக்கு கொரோனா வந்துவிட்டு சென்றது. அவர்களின் மூத்த மகளுக்கும் இன்றோடு குவாரன்டைன் முடிகிறது. இதனால் அத்துமீறல் எதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் அவரது மனைவி ரம்யாவிடம் சமூக இடைவெளி மற்றும் கவச உடைகள் அணிந்து தான் விசாரணை நடத்தினோம். இந்த சோதனைக்காக போடப்பட்டுள்ள எப்ஐஆரில் ரம்யாயவின் பெயர் இரண்டாவதாக சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், பாலாஜி நகர் பகுதியில் உள்ள அஜய்குமார் (45) என்பவர் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் அலுவலகத்தில் அரசு சார்பில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அஜய்குமார் விருப்ப ஓய்வுபெற்றார். தற்போது அவர், வாலாஜாபாத் பகுதியில் ஒரு தனியார் பள்ளி மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அஜய்குமார், தேவேரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அஜய்குமாரின் வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்தினர். விஜயபாஸ்கரின் தங்கை தனலட்சுமி, அவரது கணவர் பாலமுருகன் ஆகிய இருவரும் பல் மருத்துவர்கள். இவர்கள் இருவரும் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையில் பல் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இவர்கள், புதுப்பட்டினத்தில் உள்ள அரேபியன் கார்டனில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் வீடு, பல் மருத்துவமனையில் நேற்று சோதனை நடந்தது. புதுக்கோட்டையில் 32; சென்னையில் 8; திருச்சியில் 4; கோவை, செங்கல்பட்டில், தலா 2; மதுரை, காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடம் என மொத்தம் 50 இடங்களில் சோதனை நடந்தது. சோதனையில் 23.85 லட்சம் ரூபாய், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் சான்றிதழ்கள், சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் மற்றும் 19 வகையான டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்

LEAVE A REPLY