தேர்தல் முடிவுகள்.. தோல்வி சகஜம்… விஜயகாந்த்… வேகம் எடுப்போம்- கமல்

67
Spread the love

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பாடு பட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதிகார பலம், பண பலத்தை மீறி நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம்.  உண்மை, நேர்மை, உழைப்பை மட்டுமே நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம்.  நமக்கான காலம் நிச்சயம் வரும். அதுவரை  கழக தொண்டர்கள் துவண்டு விடாமல் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 


இதனை தொடர்ந்து தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இந்நிலையில், இது தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது டிவிட்டரில்…. “உள்ளாட்சியில் தன்னாட்சி எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY