விஜயலட்சுமி தற்கொலை முயற்சி.. சீமான், ஹரிநாடார் மீது வழக்கு

378
Spread the love

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் சீமானுக்கு எதிராக வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் சீமானுக்கு ஆதரவாக நெல்லையைச் சேர்ந்த ஹரிநாடார் விஜலடயட்சுயை மிரட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் போன் மூலம் அவமானப்படுத்தும் வகையில் ஹரிநாடார் பேசியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த நடிகை விஜயலட்சுமி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.  சிகிச்சைக்காக மலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள விஜயலட்சுமியிடம் நேற்று முன்தினம் எழும்பூர் நீதிமன்ற குற்றவியல் நடுவர் வெங்கடேசன், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜயலட்சுமியிடம் நேரில் சென்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமான் மற்றும் ஹரிநாடார் ஆகியோர் மீது வழக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் ரகசியமாக நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

LEAVE A REPLY