விஜய்யின் மனைவி சங்கீதாவிடமும் ஐடி கிடுக்குப்பிடி

414
Spread the love
நடிகர் விஜய் வீட்டில் 2 -வது நாளாக வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.  சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் மற்றும் ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.  சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியனின் நண்பர் சரவணன் வீட்டிலிருந்து ரூ.17.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
 
நடிகர் விஜய, பிகில் திரைப்படத்திற்கு  ரூ. 30 கோடி சம்பளமாக பெற்றதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்து உள்ளனர். விஜய்யின் பனையூர் வீட்டில் 18 மணி நேரமாக  சோதனை நடந்து வரும் நிலையில் வருமான 
வரித்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 77.கோடியை வருமானவரித்துறை பறிமுதல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜயின் சம்பளம் மற்றும் சமீபத்தில் வாங்கப்பட்ட சொத்துவிபரங்கள் குறித்தும் மனைவி சங்கீதாவிடமும்  வருமான வரித்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜயின்  வருமானம் குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் வாக்குமூலம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY