176 பேரை வேலையில் இருந்து நீக்கிய விகடன் குழுமம்..

288
Spread the love
கொரோனா ஊரடங்கு சமயத்தில் 176 பேரை வேலைவிட்டு நீக்கிய ஆனந்த விகடன் நிறுவனத்தின் செயலை கண்டித்து, அந்த நிறுவனம் வழங்கிய விருதுகளை பிரபலங்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.  கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் மே 31-ம் தேதி வரையில் 4 கட்ட ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அப்போது, ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கருதி, ஊதிய பிடித்தமோ, ஆட்குறைப்பு நடவடிக்கையோ செய்யக்கூடாது என தமிழக அரசு அனைத்து நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தது. 
 
இந்த நிலையில் 176 ஊழியர்களை ஜுன் 1-ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என விகடன் நிறுவனம் கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விகடன் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஊடகத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலரும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக பிரபலங்கள் மற்றும் வாசகர்களும், விகடன் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  அதிலும் உச்சகட்டமாக, இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆனந்த விகடன் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளை பிரபலங்கள் திருப்பி அனுப்புவதாக அறிவித்து வருகின்றனர். 

LEAVE A REPLY