விக்ரம் லேண்டரை 85 நாட்களுக்கு பிறகு நாசா கண்டுபிடித்தது

338

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 2 சேடிலைட்டை அனுப்பியது. அதில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கும் பணி கடந்த செப்.,7 ம் தேதி நடந்தது. சரியான பாதையில் சென்று கொண்டிருந்த விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் தூரத்தில், பூமியுடனான கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்பது தெரியவில்லை. ஆனால் தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் லேண்டர் இருப்பது பின்னர் சுற்றி வரும் ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டது. இதனால் தொடர்ந்து விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த முயற்சி வெற்றி பெறவில்லை.  அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரம் லேண்டரை இருக்கும் இடத்தை முயற்சி மேற்கொண்டது. இந்த நிலையில் இந்நிலையில் விக்ரம் -2 லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டறிப்பட்டதாக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY