தலைவர் தூக்குறார், தொண்டர் தாக்குறார்.. விருதுநகரில் நடந்த கொடூரம்.. வீடியோ

489
Spread the love

விருதுநகரில் நேற்று மாலை காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் மாநிலத் தலைவர் கேஎஸ் அழகிரி, வேட்பாளர் மாணிக் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பெரும்பாலான சேர்கள் காலியாக இருந்தன. இதனை படம் எடுத்த ஜூனியர் விகடன் போட்டோகிராபர் முத்துராஜ் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். சமீபத்தில் கேரளத்திற்கு வந்த ராகுல் கீழே விழுந்த நிருபர்களுக்கு உதவும் வீடியோ வெளியான நிலையில் விருதுநகரில் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு இதமிழ்நியூஸ் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. 

LEAVE A REPLY