நடிகர் விவேக் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..

189
Spread the love

சின்னக்கலைவாணர் என்று அன்போடு தமிழ் திரை ரசிகர்களால் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். அவரின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு காலை கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு 26 காவல்துறையினர் மரியாதையோடு நடிகர் விவேக்கின் உடல் மேட்டுக்குப்பம் மின்மாயானத்திற்கு

 

ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் தங்களது கைகளில் மரக்கன்றுகளை ஏந்தி வந்தனர்.  வழியெங்கும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மேட்டுக்குப்பம் மின்மாயானத்திற்கு சென்ற உடன்  விவேகின் மகள் தேஜஸ்வினி இறுதி சடங்கு செய்தார். அதன் பின்னர் அவரது உடலுக்கு காவல்துறையினர் 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

 

LEAVE A REPLY