பதவி பறிக்கப்பட்ட துரைசாமி.. முறைப்படி பாஜ அலுலகம் செல்கிறார்

316
Spread the love

தமிழக பாஜ தலைவர் முருகனை தி.மு.க., துணை பொதுச் செயலர், வி.பி.துரைசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி  இந்த விவகாரம் கேட்டதற்கு ‘ அவர் எனது உறவினர், எனவே வாழ்த்து தெரிவிக்க சென்றேன். ஸ்டாலின் நல்லவர் தான் சுற்றி இருப்பவர்கள் சரியானவர்களாக இல்லை ’ என பதில் அளித்தார் விபி துரைசாமி. இந்த நிலையில் துரைசாமியிடம் இருந்த, துணை பொதுச்செயலர் பதவி பறிக்கப்பட்டு  வகித்த பதவியை, அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வழங்கி, கட்சியின் தலைவர் ஸ்டாலின, அறிவிப்பு வெளியிட்டார். இந்த நடவடிக்கை குறித்து  வி.பி.துரைசாமி கூறுகையில், பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நடவடிக்கை எடுக்கப்படும் என்பது, எனக்கு ஏற்கனவே தெரியும் என்றார். இந்த நிலையில் விபி துரைசாமி இன்று முறைப்படி பாஜ மாநிலத்தலைவர் முருகனை சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

LEAVE A REPLY