குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்துமா? … திருச்சி மாநகராட்சி…

96
Spread the love

திருச்சி மாநகராட்சி 27வது வார்டு செந்தண்ணீர்புரம் சென்னை பைபாஸ் ரோடு பாலப்பகுதியின் கீழ் உள்ள பகுதியில் குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த சனிக்கிழமை முதல் 24 மணி நேரமும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசல் கொண்ட அந்த பகுதியில் குடிநீர் வீணாவதை அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் கூறுகையில் இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுக்கொள்ளவில்லை என்கின்றனர். குடிநீர் வீணாவதை மாநகராட்சி சரி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 

LEAVE A REPLY