இந்த ஒரு எண்ணெய்க்கு இவ்வளவு பவரா ?….

129
Spread the love

பொதுவாக தேங்காய் எண்ணையில் ப்யூபா(பாலி அன் சாச்சுரேடெட் பேட்டி ஆசிட்), மியூபா (மோனோ அன் சாச்சுரேடெட் பேட்டி ஆசிட்) ஆகியவை அதிகமாக உள்ளதால் இதில் சமையல் செய்தால் கொழுப்பு அதிகமாக இருக்கும் என் அலோபதி மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் கேரளாவில் சமையலில் தேங்காய் எண்ணைய்தான் சேர்கின்றனர். அவர்களுடைய மண்ணுக்கு அது ஒத்துவரும் மற்ற இடங்களுக்கு அது ஏற்றது அல்ல என மருத்துவர்கள் சிலர் கூறிகின்றனர்.

ஆனால் தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும். தலைக்கு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது. இதனால் தலை‌யி‌ன் தோ‌ல் பகு‌தியை வற‌ண்டு ‌விடாம‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் பாதுகா‌க்கு‌ம்.

பணிச்சூழல் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. இதனால் முகமானது களை இழந்து காணப்படும். தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது. தேங்காய் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கும். தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தோல்களில், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது நீங்குகிறது.

அ‌திகமாக மே‌க்-அ‌ப் போடு‌ம் பெ‌ண்க‌ள், இர‌வி‌ல் மு‌க‌த்தை சு‌த்த‌ம் செ‌‌ய்து‌ வி‌ட்டு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தட‌வி‌க் கொ‌ண்டு படு‌க்கலா‌ம். இதனா‌ல் சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்ல பொ‌லிவு ‌கிடை‌க்கு‌ம். சுத்தமான தேங்காய் எண்ணெய்’ என்று விளம்பரப் படுத்துவதை நாம் ஆங்காங்கே பார்த்திருப்போம்.

தேங்காய் எண்ணெய் தயாரிப்புக்கான கொப்பரைகளைக் காயவைக்கும்போது, அதுல் பூஞ்சை படர நிறைய வாய்ப்பு உண்டு. இப்படி பூஞ்சை படர்ந்துவிட்டால் அதைப் பயன்படுத்த முடியாது. அதனால் கவனமாக கொப்பரைகளைக் காய வைத்து எடுக்க வேண்டும். பூஞ்சை படர்ந்திருந்தால், அதையெல்லாம் நீக்க வேண்டியது அவசியம்.

சில தனியார் நிறுவனங்கள் கொப்பரைகளுடைய மேற்பரப்பில் கந்தகத்தைத் தடவி காயவைக்கத் துவங்கினார்கள். இப்போது கிட்டத்தட்ட பொதுவான வழக்கமாவே மாறிவிட்டது. கந்தகம் என்பது வீரியமான ஒரு வேதிப்பொருள். இதைக் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயை தலையில தேய்த்தால் முடி வளருமா முடிகொட்டுமா என்ற குழப்பம் மருத்துவர்கள் மத்தியில் உள்ளது.

LEAVE A REPLY