வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் என்ன பயன்…..

438
Spread the love

சர்க்கரை வியாதி :

தினமும் 8 கிராம் அளவு வெந்தயம் உங்கள் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்
தெரியுமா?. ஊற வைத்த வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் சர்க்கரை
நோயாளிகள் மாத்திரைகளை சாப்பிட தேவையில்லை.

உடல் எடை:

உடலிலுள்ள ஊளைச் சதையை வெந்தயம் கரைக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை
வேகமாக எரிப்பதால் உடல் எடையை குறைக்கும். தொடர்ந்து ஊற வைத்து காலையில் நீருடன் வெந்தயத்தையும் மென்று சாப்பிட வேண்டும்.

இதய நோய்கள் :

வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் சோடியல் அளவை கட்டுப்படுத்தி, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைக்கிறது.

மலச்சிக்கல் :

வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

வயிற்றுப் புண் :

இரைப்பையில் சுரக்கும் அதிக அமிலத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வயிறு மற்றும் இரைப்பை புண்களை ஆற்றும்.

ரத்த சோகை :

ரத்த சோகை இருப்பவர்களுக்கு இந்த ஊற வைத்த வெந்தயம் அருமருந்து. தொடர்ந்து ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வரும்போது, மாத்திரையின்றி, ரத்த சோகையை குணப்படுத்தலாம்.

LEAVE A REPLY