கச்சேரிக்கு தேதி வாங்கியவர் .. பாதிக்கப்பட்ட கதை ஏஆர் ரகுமானுக்கு தெரியுமா?

677

திருச்சியில் நாளை பிரபல இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமானின்,பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இன்னிசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நிகழ்ச்சி நடத்தும் இமைகள் எண்டா்டெய்ண்மெண்ட் கோவிந்தராஜூலு, ஜெயகா்ணா ஆகியோா் செய்து வருகின்றனா். இந்த இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர். ரகுமானுக்காக மட்டும் 6 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இமைகள் எண்டர்டெய்ண்மெண்ட் குழுவினர் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக  புலம்புகிறார் திருச்சி எக்கோ இசைக்குழுவை நடத்தி வரும் பாலு. ஏஆர் ரகுமான் திருச்சி கச்சேரிக்கு தேதி வாங்கியது அவர் தானாம்.

ரகுமானிடம் தேதி வாங்குவது மற்றும் விளம்பரம் செய்து ஸ்பான்சர் பிடிக்க என 16 லட்ச ரூபாய் வரை எக்கோ பாலு செலவழித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ஏஆர் ரகுமானுக்கு 3 கோடி ரூபாய் அட்வான்ஸ் என்கிற பிரச்சனை வர அதற்காக முக்கிய நபர்களை சந்தித்து உள்ளார். இந்த விபரம் தெரிந்து திருச்சி இமைகள் அமைப்பினர் எக்கோ பாலுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.  சரி வாருங்கள் சேர்ந்து செய்யலாம் என பாலு அழைத்திருக்கிறார். ஆனால் இமைகள் ஆட்கள் திடீரென தனியாக ஏஆர் ரகுமானை சந்தித்த அட்வான்ஸ் கொடுத்து பேசி முடித்து விட்டனர். அதன் பிறகு தன்னை கழட்டி விட்ட அவர்கள் தான் செலவு செய்த 16 லட்சத்தை கொடுங்கள் என கேட்டும் இமைகள் ஆட்கள் எதையும் கண்டுக்கொள்வில்லையாம்.. தேதி வாங்கி எக்கோ பாலு பாதிக்கப்பட்ட கதை ஏஆர் ரகுமானுக்கு தெரியுமா? என தெரியவில்லை… 

1 COMMENT

LEAVE A REPLY