பஸ்சுடன் பெங்களூருக்கு கிளம்பியது ஏன்?… ஆந்திர வாலிபர் விளக்கம்

126

கர்நாடக மாநிலம் பெங்களூர் விஜயபுராவை சேர்ந்தவர் முசாமில் கான் என்ற இளைஞர். ஊரடங்குக்கு முன்பு ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருக்கிறார். நீண்ட நாட்களாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த அவர், நேற்று நடந்தே ஊருக்கு திரும்பி செல்லலாம் என முடிவு செய்து, அனந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்துள்ளார். அங்குள்ள பணிமலையில் பஸ் ஒன்று சாவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்ட அவர், சட்டென யோசித்து பேருந்தை திருடிக் கொண்டு பெங்களூரு செல்ல முடிவெடுத்தார்.latest tamil news

பேருந்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்வதை பார்த்த பணிமனை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அனந்தபுரத்தில் உள்ள தனியார் கார் தொழிற்சாலை அருகே வந்த பேருந்தை தடுத்து நிறுத்தி, பேருந்தை கடத்தி வந்த முசாமில் கானை கைது செய்தனர். சொந்த ஊர் செல்ல நினைத்தவர் தற்போது சிறை சென்றுள்ளார்.

LEAVE A REPLY